Description
Attitudes
Attitudes and character traits cannot be role-dependent. They have to be developed in your core. Improve as a person, and not just as a role.’ – Mahatria
The content under this category has the power to transform your life by altering the way you think, feel and act.
மனப்பான்மை
எல்லாவற்றிலும் முதன்மையான
இடத்தைப் பிடிக்க என்ன வழி?
சுயமதிப்பை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?
பயத்திலிருந்து விடுபட என்ன செய்ய வேண்டும்?
Parenting
Through the contents of this category, Mahatria helps all parents to sculpt the future generation.
How to instill morality in our children?
How to make our children responsible and accountable?
How to develop healthy habits in our children?
‘Is your life an example or a warning to the next generation – not selectively, but holistically? Become a worthy role model – for our children, we are the only Quran they will read in a lifetime; the only Vedas that they will see; the only Bible that they will experience; the only Dhammapada they will imbibe and the only Dharma that they will follow. I know it is an awesome responsibility, but how else can you explain why you came into this planet before them?’ – Mahatria
பெற்றோருக்காக…
இந்தப் பிரிவில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துக்களின் மூலமாக, தங்களின் எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கையை எப்படி வடிவமைக்கலாம் என்று பெற்றோர்களுக்கு
வழிகாட்டுகிறார் மஹாத்ரயா.
நம்முடைய குழந்தைகளிடம் ஒழுக்கத்தை வளர்ப்பது எப்படி?
நம்முடைய குழந்தைகளை பொறுப்பானவர்களாக மாற்றுவது எப்படி?
நம்முடைய குழந்தைகளிடம் ஆரோக்கியமான பழக்கங்களை வளர்ப்பது எப்படி?
‘ஒரு குறிப்பிட்ட பிரிவில் இல்லாமல், வாழ்க்கையின் எல்லா பிரிவுகளிலும்
உங்கள் வாழ்க்கை அடுத்த தலைமுறையினருக்கு எச்சரிக்கையா அல்லது
எடுத்துக்காட்டா? பிள்ளைகள் பெற்றோர்களை முன்மாதிரியாக பார்க்கும்
வகையில் நடந்து கொள்ள வேண்டியது பெற்றோர்களின் முக்கிய பொறுப்பு.
பெற்றோர்களின் வாழ்க்கைதான், பிள்ளைகள் படிக்கும் குர்ஆன்.
பெற்றோர்களின் வாழ்க்கைதான் அவர்கள் கண்கூடாகப் பார்க்கும் வேதங்கள். பெற்றோர்களின் வாழ்க்கைதான் அவர்கள் அனுபவிக்கும் பைபிள்.
பெற்றோர்களின் வாழ்க்கைதான் அவர்கள் பின்பற்றும் தம்மபதம்.
பெற்றோர்களின் வாழ்க்கை மட்டுமே அவர்களை வழிநடத்தும் தர்மமாக
இருக்கும்.’- மஹாத்ரயா
Relationships
‘Relationships should never be like the overnight plants which grow at sensational pace and die with the same sensational pace. Relationships should be like the trees that live over a century.’ – Mahatria
Mahatria’s relatable examples and implementable solutions to all relationship issues will help us to develop blissful relationships through the contents of this category.
உறவுகள்
ஒரே இரவில் வேகமாக வளர்ந்து, அதே வேகத்தில் காணாமல் போய்விடும் வலிமையற்ற செடிகளாக உறவுமுறைகள் இருக்கக்கூடாது. உறவுமுறைகள், காலம் காலமாக நீடித்து நிற்கும் வலிமையான மரங்களைப் போல இருக்க வேண்டும். – மஹாத்ரயா
உறவுகளில் இருக்கும் பிரச்சினைகளை சரிசெய்வதற்காக இந்தப் பிரிவில் மஹாத்ரயா சொல்லியிருக்கும் இயல்பு வாழ்க்கை உதாரணங்களும், நடைமுறைக்கு உகந்த தீர்வுகளும் வலிமையான உறவுகளை வளர்த்துக்கொள்வதற்கு உதவியாக இருக்கும்.
Emotional development
When ego comes, everything else goes. When ego goes, everything else comes. – Mahatria
Even God cannot help you to develop in the area of emotional development. Your emotional development is your responsibility. The guidelines given by Mahatria in this book will make you responsible for your own life.
உணர்ச்சிசார் வளர்ச்சி
அகங்காரம் வந்துவிட்டால், மற்றவையெல்லாம் உங்களை விட்டு விலகிவிடும். அகங்காரம் உங்களை விட்டு விலகும்போது மற்ற எல்லாமே உங்களைத் தேடி வந்தடையும். – மஹாத்ரயா
கடவுளால் கூட உங்கள் உணர்வுப்பூர்வமான வளர்ச்சிக்கு பொறுப்பேற்க முடியாது என்பதுதான் அப்பட்டமான உண்மை. உங்கள் உணர்வுப்பூர்வமான வளர்ச்சி, உங்கள் பொறுப்பு. இந்த புத்தகத்தில் உங்கள் உணர்வுப்பூர்வமான வளர்ச்சிக்காக மஹாத்ரயா சொல்லியிருக்கும் எளிமையான வழிமுறைகள் உங்கள் வாழ்க்கைக்கு உங்களை பொறுப்பேற்க வைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
Career growth
Work must be your primary form of worship – Mahatria
Work is our only salvation. And when your work and results of your work becomes useful to the world, the by-product is that you discover the purpose of your life. The ways given by Mahatria in this book will help you to find your purpose in your life.
பணி சார்ந்த வளர்ச்சி
உங்கள் வேலைதான் நீங்கள் இறைவனுக்கு செய்யும் முதன்மையான பிரார்த்தனையாக இருக்க வேண்டும். – மஹாத்ரயா
நாம் செய்யும் வேலை தான், நம் வாழ்க்கைக்கு அர்த்தத்தை சேர்க்கும். நீங்கள் வேலை செய்யும்போது, உங்களுடைய வேலையின் மூலம் உலகத்தில் வாழும் பலருக்கு பயனுள்ளவராக இருக்கும்போது, அதற்கான பிரதிபலனாக உங்கள் வாழ்க்கையின் நோக்கத்தை, பிறந்த பயனை உங்களால் கண்டெடுக்க முடியும். இந்த புத்தகத்தின் மூலமாக மஹாத்ரயா உங்கள் வாழ்க்கையின் நோக்கத்தை கண்டெடுக்க உங்களுக்கு வழிகாட்டுகிறார்.
Student life
It doesn’t matter if others believe in you or not, you got to believe ‘I can’, and if you do, you can become whatever you want to become. – Mahatria
As a student if you are going to be tough on yourself, life will be infinitely easy on yourself. If you are easy on yourself, life will be very tough on you. Through this book, Mahatria pushes the future architects of the nation, the students towards progress, in every way saying “Yes, You Can!”.
மாணவர் பருவம்
மற்றவர்கள் “உங்களால் முடியும்” என்று நம்புகிறார்களோ இல்லையோ, “என்னால் முடியும்” என்று முதலில் நீங்கள் நம்ப வேண்டும். அப்படி நம்பினால் மட்டுமே, நீங்கள் என்னவாக மாற வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களோ அதுவாகவே நீங்கள் மாற முடியும். – மஹாத்ரயா
மாணவர்களாகிய நீங்கள், இன்று உங்கள் மீது கடுமையாக நடந்துகொண்டால், எதிர்காலத்தில் வாழ்க்கையானது எல்லையில்லா எளிமையானதாக இருக்கும். ஒருவேளை இன்று உங்கள் மீது நீங்கள் எளிமையாக நடந்து கொண்டால், எதிர்காலத்தில் வாழ்க்கை உங்களுக்கு கடுமையானதாக இருக்கும். இந்த புத்தகத்தின் மூலமாக மஹாத்ரயா நம் தேசத்தின் எதிர்காலத்தின் கட்டமைப்பாளர்களான மாணவர்களை எல்லா வழிகளிலும் “உங்களால் முடியும்” என்று உத்வேகப்படுத்துகிறார்.
Marriage
Relationships are like seeds. They have to be nurtured and developed, more so in a marriage – Mahatria
Existence on purpose had design men different from women, leaving both a little incomplete so that in embracing each other you feel that completeness. One relationship that’s always under construction is marriage. Building great marriage is an art. Use the ways and means given by Mahatria in this book and get ready to be artistic.
திருமண வாழ்க்கை
உறவுகள் விதைகளைப் போன்றவை. விதைகளை எப்படி நாம் பராமரித்து வளர்க்கிறோமோ, திருமண உறவையும் அப்படித்தான் வளர்க்க வேண்டும். – மஹாத்ரயா
படைப்பிலேயே ஆணையும் பெண்ணையும் வித்தியாசமாகவும், அதே சமயத்தில் முழுமையற்றவர்களாகவும் படைத்து, அவர்கள் இணையும்போது முழுமையடையும்படியாக படைக்கப்பட்டிருக்கிறார்கள். எப்போதுமே நிர்மாணப்பணி நடந்து கொண்டிருக்கும் ஒரு உறவுதான் திருமண உறவு. ஒரு சிறந்த திருமண உறவை வளர்ப்பது என்பது கலை. இந்த புத்தகத்தில் மஹாத்ரயா சொல்லி இருக்கும் வழிமுறைகளைப் பயன்படுத்தி, அந்தக் கலையாற்றலை வளர்த்துக்கொள்ள தயாராகுங்கள்.
Faith
Faith is more potent than the ‘object’ on which the faith is directed! – Mahatria
Faith is not anti-science; it is just beyond the comprehension of science. Faith is beyond human judgement. The beginning of every journey, every path, and every voyage is one of faith – the faith that we will reach, we will arrive, and we will succeed. Mahatria’s divine thoughts through this book will initiate you into this miraculous journey called ‘faith’.
பரிபூரண நம்பிக்கை
பரிபூரண நம்பிக்கை வைக்கப்படும் ஆதாரத்தின் சக்தியை விட, பரிபூரண நம்பிக்கை மிகவும் சக்தி வாய்ந்தது. – மஹாத்ரயா
பரிபூரண நம்பிக்கை அறிவியலுக்கு எதிரான விஷயம் அல்ல. அது அறிவியலின் புரிதலுக்கு அப்பாற்பட்ட விஷயம். பரிபூரண நம்பிக்கை மதிப்பீடுகளுக்கும் மேலான விஷயம். ஒவ்வொரு பாதைக்கும், ஒவ்வொரு பயணத்திற்கும் ஆரம்பம் பரிபூரண நம்பிக்கைதான் – பரிபூரண நம்பிக்கை என்பது சேர்ந்து விடுவோம், அடைந்து விடுவோம், வெற்றி பெற்று விடுவோம் என்பதுதான். இந்த புத்தகத்தில் இருக்கும் மஹாத்ரயாவின் தெய்வீக சிந்தனைகள் ‘பரிபூரண நம்பிக்கை’ என்ற அந்த அற்புதமான பாதையில் உங்களை வழிநடத்தும்.
Spirituality
The more and more I do God’s work, the more and more God does my work. – Mahatria
Spirituality and Spiritual Masters world over advocate contentment and renunciation. But Mahatria speaks about holistic life of health, wealth, love, bliss, and spirituality. Experience a new perspective to spirituality through this book. Some people meditate in life. For some, life itself is a meditation. Some people pray in life. Let the very life we live become our prayer unto Him.
ஆன்மீக வளர்ச்சி
நான் எவ்வளவுக்கெவ்வளவு கடவுளின் வேலையை செய்கிறேனோ, அவ்வளவுக்கவ்வளவு கடவுள் என்னுடைய வேலையை செய்வார். – மஹாத்ரயா
ஆன்மீகமும், ஆன்மீகவாதிகளும் மனநிறைவையும், துறவையும் மட்டும் வலியுறுத்தும்போது, மஹாத்ரயா ஆரோக்கியம், செல்வச் செழிப்பு, அன்பு , மகிழ்ச்சி, ஆன்மீக வளர்ச்சி… நிறைந்த அபரிமிதமான, முழுமையான வாழ்க்கையை வலியுறுத்துகிறார். இந்த புத்தகத்தின் மூலமாக ஆன்மீகத்தை மரபுகளைத் தாண்டிய புதிய கண்ணோட்டத்துடன் பாருங்கள். சிலர் தங்கள் வாழ்க்கையில் தியானம் செய்வார்கள். சிலருக்கோ வாழ்க்கையே ஒரு தியானம்தான். சிலர் தங்கள் வாழ்க்கையில் வழிபாடு செய்வார்கள். நாம் வாழும் இந்த வாழ்க்கையே நம்முடைய வழிபாடாகட்டும்.
Self-discipline
As light would dispel darkness, awareness is the only way to outgrow negativity. – Mahatria
All of us are bound by our instincts, which is to avoid pain and embrace pleasure. Through this book Mahatria dispels darkness and shows ways to awareness so that your life can be governed by pleasurable rights and painful wrongs. A human being alone cannot only study a subject, but also become the subject of his own study. Introspect with Mahatria’s thoughts and through introspection you will find the keys to awareness.
சுய ஒழுக்கம்
ஒளியானது, இருளை விரட்டியடிக்கும் என்பதைப் போல, விழிப்புணர்வுதான் உங்கள் எதிர்மறை உணர்வுகளை விரட்டியடிக்கும். – மஹாத்ரயா
நாம் எல்லோரும் நம்முடைய புலனுணர்வுடன் பிணைக்கப்பட்டிருக்கிறோம், அதாவது வலியைத் தவிர்த்து, மகிழ்ச்சியை நாடும் உணர்வு ஆரம்பத்திலிருந்து நம்முடைய பகுதியாக இருக்கிறது. இந்த புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கும் மஹாத்ரயாவின் வழிகள் உங்கள் மன இருளை அகற்றி விழிப்புணர்வின் பாதையில் உங்களை இட்டுச் செல்லும். மனிதனால் ஒரு பாடத்தைப் படிக்க மட்டுமே முடியும் என்பதில்லை, அவன் படிக்க விரும்பும் அந்த பாடமாகவும் அவன் மாற முடியும் என்பது மிக பெரிய வரப்பிரசாதம். மஹாத்ரயாவின் சிந்தனைகளுடன் உங்களையே சுய ஆய்வு செய்து கொள்ளுங்கள். சுய ஆய்வின் மூலமாக, விழிப்புணர்வுக்கான வழிகளை நீங்கள் கண்டுபிடிப்பீர்கள்.
Organisational Leadership
A business is managed while an organization is led. – Mahatria
Organisational development is a huge and demanding mental game. What is possible for Tatas and Birlas is possible for all of us. What one person can do, everyone can do – just that we have to get the game right. Mahatria believes entrepreneurs are the architects of our nation’s economy. Mahatria’s practical and enterprising ways in this book will help you to develop organizational leadership. Let us get the game right…
நிர்வாக தலைமைத்துவம்
தொழில் என்பது நிர்வகிக்கப்படுகிறது. நிறுவனம் என்பது வழி நடத்தப்படுகிறது. – மஹாத்ரயா
நிறுவன வளர்ச்சி என்பது அறிவுத் திறனுக்கு சவாலாக இருக்கும் ஒரு அசாதாரணமான விளையாட்டு. டாட்டா, பிர்லாவால் வெற்றி பெற முடிந்த அந்த விளையாட்டில் நாமும் நிச்சயம் வெற்றி பெறலாம். ஒரு மனிதரால் செய்ய முடிந்ததை எவராலும் செய்ய முடியும். விளையாட்டை நாம் சரியாகப் புரிந்து கொண்டாலே கண்டிப்பாக அதில் ஜெயித்து விடலாம். தொழில்முனைவோர்களே நம் தேசத்தின் பொருளாதார வளத்தின் கட்டமைப்பாளர்கள் என்பது மஹாத்ரயாவின் அசைக்க முடியாத நம்பிக்கை. இந்தப் புத்தகத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் மஹாத்ரயாவின் நடைமுறைக்கு உகந்த துணிவான வழிகள் உங்களின் நிர்வாக தலைமைத்துவத்தை வளர்த்துக்கொள்ள உதவியாக இருக்கும். இந்த விளையாட்டைப் புரிந்து கொள்ளுங்கள். வெற்றி கொள்ளுங்கள்.
Specification
Additional information
Weight | 1.500 kg |
---|