NOTE: Delivery of products can get delayed by additional 3 or 4 days because of restrictions and manpower availability with courier agencies.

வெற்றி பாகம் 1 (Success Volume 1)

 222

41 in stock

Categories: ,

 222

Description

வெற்றி… இந்த ஒற்றைச் சொல்தான், இந்தப் பூமியிலிருக்கும் அத்தனை மனித உயிர்களும் வேண்டித் தவிப்பது.

தோல்வி தவறானது என்பதுதான் நம்மில் பெரும்பாலானோரின் புரிதல். தோல்வி என்பதே தாமதப்படுத்தப்பட்ட வெற்றிதான் என்பதை வெவ்வேறு காலகட்டங்களில் உச்சத்தைத் தொட்டவர்களின் வரலாறு நமக்கு உணர்த்தியிருக்கிறது.

வெற்றியாளர்களின் வரலாற்றைப் படிப்பவர்களாக மட்டும் இருந்து விடாமல், நம்மையும் வரலாற்றைப் படைப்பவர்களாக மாற்றக்கூடிய ஆயுதம்தான் இந்தப் புத்தகம்.

இந்தப் புத்தகம் வெற்றிக்கானப் புரிதலை உங்களுக்குள் ஏற்படுத்தும், வெற்றிக்கானப் படி நிலைகள் என்னென்ன என்பதை உணரச் செய்யும்.   வெற்றி என்ற பயணத்தில் நீங்கள் எவ்வளவு தூரத்தைக் கடந்து வந்திருக்கிறீர்கள் என்று உங்களைச் சுய ஆய்வுக்கு உட்படுத்தும்.  வெற்றிக்கு வழி வகுக்கும் பயிற்சிகள் என்னென்ன என்பதை உங்களுக்கு அனுபவப்பூர்வமாக விளக்கும்.

இந்தப் புத்தகம் ஒரு முறை படித்துவிட்டு அலமாரியில் வைக்கக்கூடியதல்ல.  மாறாக தினம் தினம் படித்து, படித்ததை உணர்ந்து, உணர்ந்ததை நடைமுறை வாழ்க்கையில் பயிற்சியாக்கி, வெற்றி என்ற இலக்கை உங்கள் வழக்கமாக்கிக் கொள்வதுவரை உங்களுடனேயே வைத்துக்கொள்ளக்கூடியது.

இந்தப் புத்தகத்தை முழுவதுமாகப் படித்து, அதன்படி வாழுங்கள்.  உங்கள் வாழ்க்கையை அபரிமிதமான வளங்களும், வெற்றியும் நிறைக்கட்டும்.  வெற்றியின் உச்சத்தில் உங்களை சந்திக்கிறோம்.

Specification

Additional information

Weight .220 kg

Main Menu